வெளிநாடு செல்லும் நோக்கில் சென்றவருக்கு நேர்ந்த துயரம்
ஹபரன - கொழும்பு வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்ததோடு அவருடன் சென்ற மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்றைய தினம் (05.05.2023) மாலை இடம்பெற்றுள்ளது.
கிண்ணியா - மாலிந்துறையை சேர்ந்த 43 வயதுடைய முகம்மது இஸ்மாயில் முகம்மது இஸாம் என்ற குடும்பஸ்தரே இந்த விபத்தில் உயிரிழந்தவராவார்.

மின் கம்பத்துடன் மோதி இந்த விபத்து
மேலும் இவரது உறவினரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான 43 வயதுடைய செய்யது முஹம்மது முஹம்மது றியாஸ் என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் தம்புள்ள வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் மரணமானவர் ஜப்பான் நாட்டுக்குத் தொழிலுக்குச் செல்வதற்காக அக்குறுனை பகுதி உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் சந்திக்கச் சென்றபோதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வளைவு ஒன்றில் இருந்த மின்
கம்பத்துடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாகவும் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருவதாகவும் பொஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 11 மணி நேரம் முன்
சொந்த ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam