கந்தானை துப்பாக்கிச் சூடு! பொலிஸார் வெளியிட்ட தகவல்
கந்தானை பகுதியில் இன்று (03) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
உயிரிழந்தவர் உபாலி குலவர்தன என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காயமடைந்த இருவரையும் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உபாலி குலவர்தன என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு
இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வாகனத்தைத் தாக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், காயமடைந்த மற்றொரு நபர் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய சமீர மனஹார என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், கந்தானை பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் நடந்து சென்ற ஒரு பெண் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட சிறு காயங்கள் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.