யாழில் இளைஞரொருவர் உயிரிழப்பு! வெளியான காரணம்
அதிக ஹெரோயின் பாவனை காரணமாக யாழ்ப்பாணத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
இருபாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த கணேசன் நிஷாந் (வயது 29) என்பவரே இவ்வாறு நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் உணவருந்தி விட்டு தூக்கத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டில் உள்ளவர்கள் நேற்று அதிகாலை 4 மணியளவில் அவரை அவதானித்தவேளை அவர் அசைவற்று காணப்பட்டுள்ளார்.

அதிக ஹெரோயின் பாவனை
இந்நிலையில் காலை 5 மணியளவில் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின்போது, அவர் அதிக ஹெரோயின் பாவனை காரணமாக உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam