யாழில் விபத்து: இளைஞர் ஒருவர் பலி
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
குறித்த விபத்தானது நேற்றிரவு(08.08.2023)இடம்பெற்றுள்ளது.
மேலதிக சிகிச்சை
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த குறித்த இளைஞர் கம்பம் ஒன்றில் மோதி படுகாயம் அடைந்த நிலையில் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அணுமதிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட வேளை அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்துள்ள குறித்த நபர்
மன்னார் முள்ளிக்குளம் பகுதியை சேர்ந்த 22 வயதுடையவர் எனவும், வெற்றிலைக்கேணி
பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டு வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 15 மணி நேரம் முன்

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
