திருமண வீட்டில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி
ஹொரணை, அங்குருவத்தோட்ட பிரதேசத்தில் நேற்றிரவு திருமண வீடொன்றில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அங்குருவாத்தோட்டை, படகொட பிரதேசத்தில் நேற்றிரவு திருமண வைபவம் ஒன்றின் போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, படகொட சந்தியில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
மோதலில் உயிரிழந்த நபரொருவரின் சடலம் இன்று அதிகாலை படகொடை வயல்வெளியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை

சம்பவத்தில் உயிரிழந்தவர் படகொட யடவர பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய மங்கள பிரேமவர்தன என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மோதலில் காயமடைந்த இரு குழுக்களைச் சேர்ந்த 5 பேர் கொழும்பு, நாகொட மற்றும் ஹொரணை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. அங்குருவத்தோட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மகேஷ் பாபுவின் வாரணாசி பட நிகழ்ச்சியில் பாட ஸ்ருதிஹாசன் வாங்கிய சம்பளம்... இத்தனை கோடியா? Cineulagam