யூகலிப்டஸ் மரத்திலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு
யூகலிப்டஸ் மரத்தில் ஏறி அதனைத் துண்டுகளாக வெட்ட முயன்றபோது மரத்திலிருந்து கீழே தவறி விழுந்து பலத்த காயமடைந்த ஒருவர் பொகவந்தலாவ மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்தார் என பொகவந்தலாவ மாவட்ட மருத்துவமனையின் மாவட்ட மருத்துவ அதிகாரி திரு. ஏ.எஸ்.கே. ஜெயசூரிய தெரிவித்தார்.
மரத்திலிருந்து விழுந்து உயிரிழந்தவர், ஹகுரங்கெத்த, ஹெவஹெட்டவைச் சேர்ந்த 52 வயதான சரத் வீரசேகர ஆவார்.
சம்பவம் குறித்து விசாரணை
நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள கிர்க்ஸ்வால் ஹெல்பாட தோட்டதில் கீழ் பகுதியில் யூகலிப்டஸ் மரங்களை வெட்டுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரு ஒப்பந்தக்காரரின் கீழ் உயிரிழந்தவர் பணிபுரிந்து வந்து உள்ளார்.

சுமார் 35 அடி உயரமுள்ள யூகலிப்டஸ் மரத்தில் ஏறி, கிளைகளை வெட்டிக்கொண்டிருந்தபோது தவறி அவர் கீழே விழுந்து பலத்த காயமடைந்தவரை மீட்டு பொகவந்தலாவ பிராந்திய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.
நோர்வூட் பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள்! வெளிவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் புலனாய்வு தகவல்கள்
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8 Evening