மலேசியாவில் இருந்து வந்தவர் கட்டுநாயக்கவில் அதிரடி கைது! சொக்லட் பொதிக்குள் இருந்த ஆபத்தான பொருள்
பெருமளவு போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞர் ஒருவர் இன்று(14.12.2025) கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவில் இருந்து இலங்கை வந்த இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞரிடம் இருந்து 2 கிலோ 308 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
நூதனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள்
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் குறித்த இளைஞன் சோதனை செய்யப்பட்டபோது அவரிடம் இருந்து குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபரிடம் இருந்த சொக்லட்டுகள் அடங்கிய பொதியொன்று சோதனை செய்யப்பட்டபோது, குறித்த பெட்டியின் அடிப்பாகத்தில் மிக நூதனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 28 வயதுடைய ரம்புக்கணை பகுதியைச் சேர்ந்தவர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



