மட்டக்களப்பு - கல்லடி பிரதேசத்தில் இயங்கிவந்த கசிப்பு விற்பனை நிலையம் முற்றுகை
மட்டக்களப்பு - கல்லடி பிரதேசத்தில் இயங்கி வந்த கசிப்பு வியாபார நிலையத்தை முற்றுகையிட்ட பொலிஸார், வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளனர்.
மட்டு தலைமையக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து கடந்த புதன்கிழமை இரவு இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுற்றிவளைப்பு
தலைமையக பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவு பொலிஸார் கல்லடி நாகதம்பிரான் வீதியில் இயங்கிவந்த வீடு ஒன்றை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.
இதன்போது அங்கு வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆண் வியாபாரி ஒருவரை கைது செய்ததுடன் 52 லீற்றர் கசிப்பை மீட்டனர்.
விளக்கமறியல்
இதில் கைது செய்யப்பட்டவரை நேற்று (2) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



