மன்னாரில் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல்! ஒருவர் கைது
மன்னார் - உயிலங்குளம் வீதியில் உயிலங்குளம் பகுதியில் வைத்து 3 கோடி ரூபாவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (29.08.2023) மாலை பதிவாகியுள்ளது.
கைது செய்யப்பட்டவர் மன்னார் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல்
மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் சுமார் 3.394 கிலோகிராம் நிறையுடைய குறித்த போதைப்பொருள் கடத்தி செல்லப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் உயிலங்குளம் பகுதியில் வைத்து பேருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட நபர் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் உயிலங்குளம் பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |