தங்க விலை நிலவரத்தில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
தங்கத்தின் விலை அண்மைய சில கிழமைகளாக ஏற்ற இறக்கத்தை பதிவு செய்து வருகிறது.
இந்த நிலையில் கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்று தங்கத்தின் விலையில் சிறியளவு அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
செட்டியார் தெரு நிலவரப்படி, 22 கரட் 1 கிராம் தங்கம் 30,594 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுணொன்று 244,750 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ் இந்திய துணைத்தூதரக உத்தியோகத்தர் ஓமந்தை விபத்தில் பலி - மனைவி உட்பட மூவர் அவசர சிகிச்சைப் பிரிவில்
அதேவேளை 24 கரட் 1 கிராம் தங்கம் 33,250 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுணொன்று 266,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய விலை நிலவரம்
இதேநேரம் கொழும்பு செட்டியார் தெருவின் நேற்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்க பவுண் ஒன்று 266,000 ரூபாவாகவும், 22 கரட் தங்க பவுண் ஒன்று 244,000 ரூபாவாகவும், 18 கரட் தங்க பவுண் ஒன்று 199,500 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |