தலவாக்கலையிலும் மேலும் ஒரு எரிவாயு அடுப்பு வெடிப்பு (Photos)
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை, வோக்கர்ஸ் பகுதியில் மேல் கொத்மலை புதிய வீட்டுத் தொகுதியில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேநீர் தயாரிப்பதற்காக எரிவாயு அடுப்பை பற்ற வைத்த பின்பு அதனை, அனர்த்திவிட்டு வெளியில் சென்ற ஒரு நொடியிலேயே இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
வெடிப்பை அடுத்து எரிவாயு அடுப்பு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், அதன் பின்னர் கொள்களன் உள்ளிட்ட உபகரணங்களை அகற்ற நடவடிக்கை எடுத்ததாக வீட்டின் உரிமையாளர் வேலுசாமி ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



நுவரெலியாவில் வெடித்த எரிவாயு கொள்களன்
நுவரெலியா – நானுஓயா நகரில் உள்ள மதுபானம் விற்பனை நிலையம் ஒன்றின் சமையல் அறையில் பயன்படுத்தப்பட்ட எரிவாயு கொள்களனின் ரெகுலேட்டர் வெடித்து சிதறியுள்ளது.
எரிவாயுவை கடத்தும் ரெகுலேட்டர் பகுதியிலேயே இந்த வெடிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வெடிப்பு சம்பவத்தை அடுத்து எரிவாயு கொள்களன் தரையில் விழுந்து புறண்டுள்ளது.
குறித்த எரிவாயு கொள்களன் கவிழ்ந்ததால் அதிலிருந்த கேஸ் எரிவாயு அனைத்தும் சுமார் 15 நிமிடங்கள் வெளியேறியதாக மேற்படி நிலையத்தின் ஊழியர்கள் தெரிவித்தனர்.
எரிவாயு கொள்களன் அடுப்புடன் இணைக்கும் போது இந்த வெடி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் குறித்த கேஸ் நிறுவன அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஊழியர்கள் மேலும் தெரிவித்தனர்.


| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! | 
 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 16 மணி நேரம் முன்
 
    
    போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        