சுகத் மெண்டிஸுக்கு ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீடு: உயர்நீதிமன்றம் உத்தரவு
குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுடன் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த குற்றப் புலனாய்வுப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸுக்கு ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீட்டை வழங்குமாறு இலங்கையின் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவினை உயர்நீதிமன்றம் நேற்று(06.10.2023) வழங்கியுள்ளது.
கோடீஸ்வர தொழிலதிபர் முகமது ஷியாம் கொலை வழக்கில், அவரது மகன் மற்றும் நான்கு பேருடன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ் அதிகாரி வாஸ் குணவர்தனவை கைது செய்ய, ஷானி அபேசேகர சில இடங்களில் எதிர்ப்பை முன்வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில், ஷானி அபேசேகரவுடன் மெண்டிஸ் கைது செய்யப்பட்டு 11 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில் தடுத்து வைப்பு குற்றமாகும் என நேற்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், சுகத் மெண்டிஸுக்கு அனைத்து சம்பள உயர்வுகள், சலுகைகள் மற்றும் பதவி உயர்வுகளை வழங்குமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் முன்னதாக 11 மாத சிறைவாசத்தைத் தொடர்ந்து, மென்டிஸுக்கு எதிராக செய்யப்பட்ட முறைப்பாடுகளில் பல முரண்பாடான நிலைப்பாடுகளால் மெண்டிஸ், ஷானி அபேசேகரவுடன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 1ம் நாள் - மாலை திருவிழா





10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
