இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள மேலும் ஒரு இலட்சம் பைசர் தடுப்பூசிகள்
அமெரிக்காவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள் இன்று இலங்கை வந்துள்ளன.
அதன்படி, ஒரு இலட்சம் பைசர் தடுப்பூசி டோஸ்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டார் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் மூலம் இன்று அதிகாலை இந்த தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.
460 கிலோகிராம் நிறையுடைய 13 பெட்டிகளில் குறித்த தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவை பாதுகாப்பாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இதேவேளை, இதற்கு முன்னர் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட டோஸ் பைசர் தடுப்பூசிகள் அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
