வெள்ளவத்தையில் தொடருந்து மோதி ஒருவர் பலி! சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை
கொழும்பு, வெள்ளவத்தை தொடருந்தில் மோதி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று(22) மாலை இடம்பெற்றுள்ளதாக வெள்ளவத்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறையில் இருந்து புத்தளம் நோக்கிச் சென்ற தொடருந்தில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி நபர் கறுப்பு நிற காற்சட்டை மற்றும் வெள்ளை மற்றும் நீல நிறச் சட்டை அணிந்துள்ளார் எனவும், சுமார் 60 வயது மதிக்கத்தக்கவர் எனவும் பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.
சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



