கிண்ணியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு: சாரதி விளக்கமறியலில் வைப்பு
கிண்ணியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்புக்குக் காரணமான பேருந்து வண்டியின் சாரதியை இம்மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.
திருகோணமலை - பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே இன்று விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் கிண்ணியா தள வைத்தியசாலையில் சுகாதார உதவியாளராகக் கடமையாற்றி வந்த ரஞ்சுதன் ஜோதிமணி வயது 43 என பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று(31) மாலை திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதி, உப்பாற்றுச் சிறுவர் பூங்காவிற்கு அருகில் இடம் பெற்றுள்ளது. முன்னால் சென்று கொண்டிருந்த தனியார் சுற்றுலாப் பயண பேருந்து வண்டியை முந்திச் செல்ல முற்பட்ட போது விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதியைக் கைது செய்து திருகோணமலை நீதிமன்ற
நீதிவான் வாசஸ்தலத்தில் முன்னிறுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு
உத்தரவிட்டார் .



