யானை தாக்கி நபர் ஒருவர் மரணம் - தம்பலகாமத்தில் சம்பவம்
திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவிப்பாஞ்சான் குளத்துக்கு மேல் உள்ள காட்டுப்பகுதியில் யானையின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் சடலமொன்று இன்று (09) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான கந்தளாய்- வென்ராசன்புர பகுதியைச் சேர்ந்த 56 வயதான் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காட்டுப்பகுதிக்கு இன்று காலை சென்றபோது காட்டு யானை தாக்கியதாகவும் அவருடன் சென்றவர் பயம் காரணமாக ஓடி உள்ளதாகவும் தெரிய வருகின்றது.
குறித்த சம்பவ இடத்திற்குத் திருகோணமலை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எஸ்.எம்.றூமி சென்று பார்வையிட்டதுடன், பிரேதப் பரிசோதனைக்காகச் சடலத்தை கந்தளாய் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு கட்டளையிட்டுள்ளார்.
குறித்த மரணம் தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




