பிரமிட் திட்டம் தொடர்பான வாக்குவாதத்தில் ஒருவர் கொலை
பிரமிட் திட்டம் தொடர்பாக இரண்டு தரப்பினருக்கு இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் அடிதடியாக மாறியதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் அம்பாந்தோட்டை - தங்காலை நகர்ப்புறத்தை அண்மித்த பிரதேசமொன்றில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்தவர் 37 வயதுடைய நுவன் பிரியந்த என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
உயிரிழந்த நபர் அவருடைய மனைவியின் சகோதரியின் கணவராலேயே தடியால் தாக்கியதாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபரின் தூண்டுதலின் பேரில் சந்தேக நபரான உறவினர் பிரமிட் திட்டத்தில் 20 இலட்சம் ரூபாவை வைப்பிலிட்டு பணத்தை பெற்றுக் கொள்ள முடியாது மனஅழுத்தத்தில் இருந்துள்ளார்.
இது தொடர்பில் இருவருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு தடியால் தாக்கியதில் நுவன் பிரியந்த கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.