திருகோணமலையில் யானை தாக்கி ஒருவர் பலி
திருகோணமலை- சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலாப்பொல கிராமத்தில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (12.08.2023) பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் நீலாப்பொல கிராமத்தின் பின்புறமாகவுள்ள காட்டுப் பகுதியில் வைத்தே இடம்பெற்றுள்ளது.
மணல் ஏற்றுவதற்கு சென்ற நபர்
இச்சம்பவத்தில் நீலாப்பொல கிராமத்தைச் சேர்ந்த டி.டி.சில்வா (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கூலித்தொழிலிக்காக மணல் ஏற்றுவதற்காக சென்ற வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபரின் மரணம் தொடர்பான விசாரணையை சேருவில திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சேருவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam