யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்...!
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் வல்லிபுரம் ஆலயத்திறக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
வல்லிபுர கோவிலடியை சேர்ந்த பொன்னையா தேவராசா என்கின்ற 64 வயதுடைய முதியவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
விசாரணை
இவர் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மகேந்திரா ரக வாகனம் தப்பிச் சென்ற நிலையில் குறித்த வாகனத்தை கைப்பற்றும் நடவடிக்கையில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலமையிலான குழுவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அனோஜனின் விடுதலைக்காக காத்திருக்கும் இலங்கை மக்கள் - புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் கோரிக்கை
இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு ஆயுத விற்பனை - இறுதிப் போரில் எஞ்சிய வெடிப்பொருட்களுக்கு என்ன நடந்தது...!