வவுனியாவில் வீதி விபத்து: ஒருவர் படுகாயம் (Photos)
வவுனியா - பட்டானிச்சூர் பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் முதியவரொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்நிலையில், படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் தெரியவருகையில்,
பட்டானிச்சூர் பாடசாலையினை அண்மித்த பகுதியில் நேற்று (25.12.2023) மதியம் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
வவுனியா நகரிலிருந்து மன்னார் வீதியூடாக முதியவரொருவர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் வீதியின் மறுபக்கம் மாற முற்பட்ட சமயத்தில் அதே திசையில் வந்த அதிவேக சீசியுடைய மோட்டார் சைக்கிள் முதியவர் செலுத்திய மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் முதியவர் படுகாயமடைந்த நிலையில் 1990 அவசர நோயாளர் காவு வண்டி சேவையூடாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் விபத்துக்குள்ளான இரு மோட்டார் சைக்கிளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா மற்றும் நெளுக்குளம் போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதி.. இன்று வரை கேள்விக்குறியே! 1 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண்: நீதி கிடைக்காமல் தவிக்கும் குடும்பத்தினர் News Lankasri
செம மாஸ் வரவேற்பு பெற்றுள்ள கருப்பு திரைப்படம்... சந்தோஷத்தில் சூர்யா வெளியிட்ட செம வீடியோ Cineulagam
CM ஆன விஜய், அதற்கு எதற்கு அது வேண்டும்... மூன்று முடிச்சு சீரியல் நடிகர் நியாஸ் ஓபன் டாக் Cineulagam