களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்முனை பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும், துவிச்சக்கர வண்யொன்று வீதியைக் குறுக்கீடு செய்ய முற்பட்ட போதே இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த மருதமுனையைச் சேர்ந்த 19 வயதுடைய அப்துல் ஹமீட் றாசிக் என்பவர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அமெரிக்க ஒப்பந்தத்தை மறுத்தால் ஜெலென்ஸ்கி கொல்லப்படலாம்... ரஷ்யாவில் இருந்து கசிந்த தகவல் News Lankasri
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri