மட்டக்களப்பில் கடற்படை வாகனம் மோதியதில் ஒருவர் காயம்: கடற்படை வீரர் கைது
மட்டக்களப்பு வாழைச்சேனையில் இருந்து ஏறாவூர் நோக்கி பிரயாணித்த கடற்படை கனகர வாகனம், வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அருகில், வீதியால் சென்ற பாதசாரி ஒருவர் மீது மோதியதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து, நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை(07.10.2025) இடம்பெற்றுள்ளது.
வாகன சாரதியான கடற்படை வீரரை கைது செய்துள்ளதாகவும் வாகனத்தை தடுத்து வைத்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
கல்லடி கடற்படை தளத்திற்கு சொந்தமான கனகர வாகனம் வாழைச்சேனையில் இருந்து ஏறாவூர் நோக்கி சம்பவ தினமான நேற்று இரவு 10.30 மணியளவில் பிரயாணத்துக் கொண்ட நிலையில், வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அருகில், வீதியால் சென்ற பாதசாரி மீது விபத்துக்குள்ளானதில் அவர் படுகாயமடைந்தார்.
இதனையடுத்து, அவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
குறித்த வாகனத்தின் சாரதியான கடற்படை வீரரை கைது செய்ததுடன் வாகனத்தை தடுத்து வைத்துள்ளதாகவும் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




