ஜெனீவாவில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை திருப்திபடுத்திய அரசாங்கம்!
ஜெனீவாவில் அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை சந்தோசப்படுத்தியுள்ளதாக மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
குறை நிரப்பு மதிப்பீட்டு இல. 03 (போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு) விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கைக்கான தீர்மானத்தை வாய்மொழி மூலம் நிராகரித்த அரசாங்கம் வாக்கெடுப்பு இன்றி ஒருமனதாக நிறைவேற்ற அனுமதித்துள்ளது.
அரசாங்கம் இரட்டை வேடம்
இந்தப்பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டால் வெற்றியளிக்கும் வகையில் பல நாடுகளின் ஆதரவு இருந்தாலும் இணை அனுசரணை நாடுகளின் சார்பாக பிரித்தானியா விடுத்த அழைப்புக்கு ஏற்ப வாக்கெடுப்பு இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஏன் அரசாங்கம் இரட்டை வேடம் போடுகிறது.யாரை சந்தோசப்படுத்தப் போகிறது. புலம்பெயர் தமிழர்களையா?
அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களையா? இல்லையென்றால் ஒரு மனதுடன் இந்த பிரச்சினைக்கு தீர்வை வழங்குங்கள்.
நீங்கள் எதிர்க்கட்சியில் இருக்கும் போது அபிவிருத்தி திட்டங்களை பொறாமையுடன் எதிர்க்காமல் இருந்திருந்தால் இன்று அதிவேக நெடுஞ்சாலைகளை ஜனாதிபதிக்கு திறந்து வைத்திருக்கலாம்.
ஆனால் இன்று வீதிகள் அமைக்கப்பட வேண்டும் என நினைப்பதை நாம் பாராட்ட வேண்டும். கிராமத்துக்கு வீதிகளை அமைத்தால் அதில் சாப்பிட முடியுமா?என்ற கேட்டவர்கள் கிராமிய வீதிகளை அமைப்பது வரவேற்கத்தக்கதாகும்” என கூறியுள்ளார்.




