ஈ-சிகரெட் பயன்படுத்திய அமைச்சர் ஒருவரின் மகன்.. சாமர சம்பத் வெளியிட்ட தகவல்
பதுளை மத்திய வித்தியாலயத்தில் அமைச்சரவை அமைச்சரின் மகன் ஈ-சிகரெட்டை நான்கு மாணவர்களுடன் சேர்ந்து பயன்படுத்தியுள்ளதாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
குறைநிரப்பு மதிப்பீட்டு இல. 03 (போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு) விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தொடர்ந்து பேசிய அவர், "பிரதியமைச்சரின் மகள் தனக்கு மாணவத் தலைவி பதவி வழங்கவில்லையென மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஈ-சிகரெட்
பயத்தில் அதிபர் குறித்த மாணவிக்கு மாணவத் தலைவி பதவியை வழங்கியுள்ளார்.
அரசாங்கத்தின் அமைச்சர்களின் பிள்ளைகளை ஒழுக்கத்துடன் வளர்க்க முடியாதவர்கள் எவ்வாறு குழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவது தொடர்பான தண்டனைச் சட்டக்கோவை சட்டத்தை கொண்டுவந்து நாட்டின் பிள்ளைகளை எவ்வாறு திருத்த போகிறார்கள்.
ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகம் கடுமையாக எதிர்த்தமையால் குழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவது தொடர்பான தண்டனைச் சட்டக்கோவை திருத்தச் சட்ட மூலத்தை அரசாங்கம் திரும்ப பெற்றுக் கொண்டது” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




