கட்டுத்துவக்கு வெடித்ததில் குடும்பஸ்தர் காயம்: வைத்தியசாலையில் அனுமதி
முல்லைத்தீவு - நட்டாங்கண்டல் கொம்புவைத்தகுளம் பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நட்டாங்கண்டல் கொம்புவைத்தகுளம் பகுதியில் வயலுக்குச் சென்று திரும்பிய குடும்பஸ்தர் கட்டுத்துவக்கில் சிக்கி காலில் காயமடைந்த நிலையில் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டர்.
பின் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காகக் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மாங்குளம் நட்டாங்கண்டல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam