யாழில் இன்று ஒருவர் கோவிட் தொற்றால் மரணம்!
யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கோவிட் வைரஸ் தொற்று நோயால் இன்று உயிரிழந்துள்ளார் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட் நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 73ஆக உயர்வடைந்துள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, யாழ் மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4ஆயிரத்து 919 ஆக அதிகரித்துள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த தொற்றாளர்களில் சுமார் 3 ஆயிரத்து 696 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri