யாழில் தேங்காய் விழுந்து ஒருவர் உயிரிழப்பு(Photo)
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி பகுதியில் சேர்ந்த ஒருவர் தேங்காய் விழுந்து உயிரிழந்துள்ளார்.
அராலி மத்தியைச் சேர்ந்த சிவானந்தன் கஜாணன் (வயது 39) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சாரதியாக பணிபுரியும் குறித்த நபர் கடந்த 16ஆம் திகதி தனது வாகனத்தை நிறுத்திவிட்டு
தென்னை மரத்தின் கீழ் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். இதன்போது
அவரது நெஞ்சுப் பகுதியில் தேங்காய் விழுந்துள்ளது.
இறுதிச் சடங்குகள் இன்று
இதனையடுத்து, நேற்று (18.01.2023) அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுக்கொண்டிருந்தபோது இடையில் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் பிரதேச பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம்
கையளிக்கப்பட்ட நிலையில், இறுதிச் சடங்குகள் இன்று (19.01.2023) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




