நீர்கொழும்பு மாநகர சபை ஊழியர் விபத்தில் பலி
நீர்கொழும்பு நகரில் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் நீர்கொழும்பு மாநகர சபையில் கடமை புரியும் ஊழியரொருவர் உயிரிழந்துள்ளார்.
நீர்கொழும்பு, தலாதுவ வீதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நீர்கொழும்பு நகரை நோக்கிப் பயணித்த, நீர்கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான உழவு இயந்திரப் பெட்டியின் பின்பக்கமாக இருந்து பயணித்த குறித்த நபர், கீழே விழுந்துள்ளார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பம்
இவ்வாறு வீதியில் வீழ்ந்து படுகாயமடைந்த குறித்த நபரை அங்கிருந்தவர்கள் உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் சேர்த்த போதிலும், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று நீர்கொழும்பு பொலிஸார் கூறினர்.
விபத்துடன் தொடர்புடைய உழவு இயந்திரத்தைச் செலுத்திச் சென்ற சாரதி பொலிஸாரால்
கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு பொலிஸார் விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri