செல்லப்பிராணியை மீட்க கிணற்றில் இறங்கிய இளைஞர் சடலமாக மீட்பு! (Photo)
கிளிநொச்சி - உதயநகர் பகுதியில் செல்லப்பிராணியை மீட்க கிணற்றில் இறங்கிய இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
24 வயதுடைய விவேகாந்தன் வேணிலவன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழப்புக்கான காரணம்
வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட நாய் கிணற்றில் விழுந்துள்ளது. குறித்த நாயை மீட்பதற்காக இளைஞர் பாதுகாப்பற்ற கிணற்றில் தும்புக் கயிறைப் பயன்படுத்தி இறங்கியுள்ளார். இதன்போது கயிறு அறுந்ததால் அவர் கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.
சேற்றில் மாட்டிக்கொண்டமையால் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். அயலவர்களின் உதவியுடன் கிணற்று நீர் இறைக்கப்பட்டு இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது.
சடலம், உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
May you like this Video
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
துப்பாக்கி தோட்டாக்களுடன் சிறைக்குள் நுழைய முயன்ற பள்ளிச் சிறுமி: விசாரணையின் கூறிய காரணம் News Lankasri