சீனாவில் அதிகரித்து வரும் ஒருநாள் திருமணங்கள்: ஆச்சர்யமூட்டும் பின்னணி
சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் உள்ள கிராமங்களில் தங்கள் மூதாதையருடன் சொர்க்கத்திற்கு சென்று சேர வேண்டும் என்பதற்காக ஒரு நாள் மட்டும் திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அங்குள்ள கிராமங்களின் வழக்கப்படி தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை சரிவர பார்த்துக் கொள்ள முடியாமல் உயிரிழக்கும் ஆண்கள் அவர்களுடைய குடும்ப கல்லறையில் புதைக்க கூடாது.
அத்துடன் அவர்களால் தங்களுடைய மூதாதையர்களுடன் சொர்க்கத்திற்கு சென்று சேரவும் முடியாது என்ற நம்பிக்கை பரவலாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாவச் செயல்கள்
மேலும் இதனால் உருவாகும் பாவம் பல தலைமுறைகளுக்கு தொடரும் என்ற நம்பிக்கையும் கிராமத்தினர் மத்தியில் நிலவி வருகிறது.
இதைப்போல ஆண்கள் அனைவரும் திருமணம் நிறைவடைந்த நபராக இருக்க வேண்டும், அப்போது தான் அவர்களால் சொர்க்கத்திற்கு சென்று சேர முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 5,6 ஆண்டுகளில் ஒரு நாள் திருமணங்கள் சீனாவில் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சடங்கிற்காக நடத்தப்படும் திருமணம்
இதனால் உயிரிழந்த சில நபர்களை கூட இங்கு பெண்கள் சம்பிரதாயத்திற்காகத் திருமணம் செய்து கொள்கின்ற நிலைமை காணப்படுவதாக கூறப்படுகிறது.
திருமணம் நடைபெற்ற பின்னர் தங்களுக்கு திருமணம் நடந்து விட்டது என்பதை மூதாதையர்களுக்கு காட்டுவதற்காக அவர்கள் தங்கள் மூதாதையர்கள் கல்லறைக்கு சென்று பின் இருவரும் பிரிந்து சென்று விடுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த திருமணங்கள் எதுவுமே சட்டப்பூர்வமானது இல்லை எனவும் வெறும் சடங்கிற்காக நடத்தப்படும் திருமணம் மட்டுமே இது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |