ஒரு நாடு ஒரு சட்டம் : திருடனை பிடித்து விதானை வேலை கொடுப்பதுபோல என்கிறார் சிறீநேசன்
ஞானசார தேரர் என்பவர் ஒரு சர்ச்சைக்குரிய தேரர். தமிழ் முரண்பாடு முஸ்லிம்களுடைய முரண்பாடு என்று முரண்பாட்டை விதைத்து கொண்டிருக்கின்றனர். இவர் யாருடைய பின்னணியில் செயற்படுகின்றார் என்பது பலருக்கு தெரியாமல் இருந்தது. ஆனால் இப்போது வெளிப்படையாக தெரிகின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசன்(G.Srineshan) தெரிவித்துள்ளார்.
ஒரு நாடு ஒரு சட்டம் என்ற பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார(Gnanasara Tero) தேரர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழு தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஞானசார தேரர் என்பது தற்போதைய பொதுஜன பெரமுன கட்சியின் ஆசிர்வாதத்துடன் செயற்படுகின்ற ஒருவர்தான் . இந்த ஞானசார தேரர் ஒருதடவை நீதிமன்றத்தை அவமதிப்பு செய்த குற்றச்சாட்டில் கடுழிய தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்.
இவர் ஒரு தேரர் என்பதற்காக பொதுமன்னிப்பின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் விடுதலை செய்திருந்தார்.
அதன்பின்னரும் பல்வேறுபட்ட முரண்பாடுகளை ஏற்படுத்தி இருக்கின்றார் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழுவில் விசாரணை நடத்தியபோது அவர்களின் சிபாரிசில் ஒன்றாக அமைவது இந்த பொது பல சேனாவை தடை செய்ய வேண்டுமென்றே ஜனாதிபதியினால் செயல்படுத்தப்பட்ட ஆணைக்குழு தெரிவித்திருக்கின்றது. காரணம் அவர் இன ஐக்கியத்திற்கு குரோதமாக செயற்படுகின்றார் என்பதுதான் உண்மை.
தற்போது ஒரே நாடு ஒரே சட்டம் என்பதற்கு இவரை தலைவராக நியமித்து இருக்கிறார்கள் என்றால் முன்னைய பழமொழி ஒன்று இருக்கின்றது திருடனை பிடித்து விதானை வேலை கொடுத்தது போல இந்த செயற்பாடானது இன ஐக்கியத்தையும் தேசிய ஒருமைப்பாட்டையும் குழப்புகின்ற நடவடிக்கையாக தான் நான் பார்க்கின்றேன்.
ஆகவே இந்த செயற்பாடானது சிங்கள மக்களையும் தமிழ் முஸ்லிம் மக்களையும் மோத வைத்து ஒரு செயற்பாடாகவே இது ஒரு கண்ணியமற்ற விருப்பமற்ற செயற்பாடாக தான் இருக்கின்றது இவரால் வழங்கப்படும் பரிந்துரைகள் அனைத்தும் சிறுபான்மை இனத்தவருக்கு பொருத்தமற்றதாகவே இருக்கும் என்று நான் நினைக்கின்றேன். ஆகவே இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam