மன்னார் வைத்தியசாலை வளாகத்தில் யாழ். இளைஞன் உயிர்மாய்ப்பு
புதிய இணைப்பு
மன்னார் வைத்தியசாலை வளாகத்தில் உயிரிழந்த இளைஞன், யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.
ஜோன் ஜெத்தா என்ற குறித்த இளைஞன் 32 வயதுடைய திருமணமாகாத நபர் எனவும் கூறப்படுகின்றது.
மேலும், இளைஞனின் சடலம் நீதிபதியின் பார்வைக்காக வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, இளைஞனின் மரணத்திற்கான காரணங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
முதலாம் இணைப்பு
மன்னார் - வைத்தியசாலை வளாகத்தில் இளைஞரொருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இன்று காலை தூக்கில் தொங்கியவாறு அவருடைய சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
விபரீத முடிவு
மன்னார், வைத்தியசாலையில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடும் இளைஞரொருவரே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இளைஞனின் இந்த விபரீத முடிவுக்கு என்ன காரணம் என்பது தொடர்பில் இதுவரையில் தெரியவரவில்லை.
மேலும், நேற்றையதினம் இரவு குறித்த நபர் இவ்வாறு தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக தகவல் - ராஜூகரன்
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
ஈரான் தாக்குதலில் நொறுங்கிப் போன அமெரிக்க போர் விமானங்கள்: வெளியானப் புகைப்படங்களால் அதிர்ச்சி News Lankasri