யாழில் பெருமளவான கசிப்பு மற்றும் கோடாவுடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணம்(Jaffna) - சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுன்னாகம் தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கையானது இன்றையதினம் 19.06.2024) இடம்பெற்றுள்ளது.
அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த நபர் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த வேளை சுன்னாகம் பொலிஸார் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான கோடா மற்றும் 6000 மில்லிலீட்டர் கசிப்பு என்பன மீட்கப்பட்டுள்ளன.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 10ஆம் நாள் மஞ்சத்திருவிழா





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 15 மணி நேரம் முன்

வெளிவந்த மனோகரின் சதி, அப்பாவை தள்ளிவிட்ட கொதித்தெழுந்த நிலா, தரமான சம்பவம்.. அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் Cineulagam

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri
