3 கோடி 20 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
யாழ்.வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணிப் பகுதியில் 3 கோடி 20 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என்று கடற்படையினர் அறிவித்துள்ளனர்.
சந்தேகநபரிடமிருந்து 107 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கட்டைக்காடு – வெற்றிலைக்கேணி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது, சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,அவரிடமிருந்து கேரள கஞ்சா அடங்கிய 16 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையின்போது, வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா அடங்கிய மேலும் 24 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் முள்ளியான் பகுதியைச் சேர்ந்த 33 வயதான நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவர் மேலதிக விசாரணைகளுக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
