காத்தான்குடியில் தடைசெய்யப்பட்ட சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது
காத்தான்குடியில் தடைசெய்யப்பட்ட சிகரெட்களை வியாபாரம் செய்துவந்த ஒருவரை கைது செய்ததுடன் மறைத்துவைக்கப்பட்டிருந்த 04 பண்டல் கொண்ட 1020 சிகரட்டுக்களை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது இன்று(23) பிற்பகல் காத்தான்குடி 6ம் பிரிவிலுள்ள அல்அமீன் வீதியிலுள்ள வீடு ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றிற்கமைய களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினருடன் இராணுவ புலனாய்வு பிரிவினரும் இணைந்து அப்பகுதியில் உள்ள வீட்டினை முற்றுகையிட்டு சோதனையிட்டனர்.
இதன்போது விற்பனைக்காக வைத்திருந்த தடை செய்யப்பட்ட 04 பண்டல் சிகரட்டுக்களை மீட்டதுடன் ஒருவரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரையும் மீட்கப்பட்ட சிகரட்டுக்களான சான்று
பொருட்களுடன் விசேட அதிரடிப்படையினர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam