தருமபுரம் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது
கிளிநொச்சி - தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டிருந்த வேளையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தனியார் வர்த்தக நிலையம் ஒன்றில் மறைத்து
விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளை தர்மபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற
இரகசிய தகவலையடுத்து இன்றைய தினம் சந்தேகநபர் கைது
செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடமிருந்து 60 லிட்டர் சட்டவிரோத மதுபான காசி பிணையும் பொலிஸார் பறிமுதல் செய்ததோடு, சந்தேகநபரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து
விசாரணைகள் நடைபெற்று பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிப்பதற்கு நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
