கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது
நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் பீடிகளுடன் சந்தேகநபர் ஒருவரை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது.
இதன்போது பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகள் மற்றும் பீடிகளின் மதிப்பு இருபது இலட்சத்திற்கும் அதிகம் என்றும் கூறப்படுகிறது.
நீதிமன்றத்தில் முன்னிலை
சந்தேகநபர் (17) இன்று அதிகாலை 12.40 மணிக்கு இந்தியாவின் சென்னையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

சந்தேகநபர் நான்கு சூட்கேஸ்களில், பொம்மைகள், புடவைகள், சட்டைகள் மற்றும் பிற பொருட்களுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டு, 12,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கொண்ட 60 சிகரெட் அட்டைப்பெட்டிகளையும், 23,800 இந்திய பீடிகள் கொண்ட 19 பீடி மூட்டைகளையும் கொண்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் மதுகம, வல்லல்லாவிட்டவையைச் சேர்ந்த 33 வயதுடைய மோட்டார் மெக்கானிக் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் எதிர்வரும் 21 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.