இலங்கையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இந்தியாவில் ஒருவர் கைது
இலங்கையில் 2017ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இந்தியாவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய காவல்துறையினர் இது தொடர்பில் இலங்கையின் காவல்துறையினருக்கு அறிவித்துள்ளனர்.
11 அகவைக்கொண்ட சிறுவன் மற்றும் காவல்துறை அதிகாரி ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த மொஹமட் மாஹில் நவாஸ் என்பவரே இந்திய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்
இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளவர், துப்பாக்கிச் சூட்டுக்கு உதவியளித்தவர்கள் என்று விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை இந்த கைது தொடர்பாக சந்தேகத்துக்குரியவர் கைது செய்யப்பட்டு மதுரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச காவல்துறையான இன்டர்போல் இலங்கைக்கு அறிவித்துள்ளது.