தடைசெய்யப்பட்ட பொருட்களுடன் கொழும்பில் ஒருவர் கைது
தடைசெய்யப்பட்ட இலத்திரனியல் சிகரட்டுகளை விற்பனை செய்த நபரொருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் உள்ள கடையொன்றின் உரிமையாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தனிநபர்களுக்கு விற்பனை
வாசனை திரவியங்கள் மற்றும் இனிப்பு பொருட்கள் விற்பனை செய்யும் இடத்தில் சட்டவிரோதமாக இலத்திரனியல் சிகரெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் திடீர் சோதனையொன்றை மேற்கொண்ட போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து சுமார் 3.5 மில்லியன் ரூபாய் மதிப்புடைய 620 இலத்திரனியல் சிகரெட்டுகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த இலத்திரனியல் சிகரெட்டுகள் இனிப்பு பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்களில் மறைத்து இறக்குமதி செய்யப்பட்டு, 8000 -10000 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் தனிநபர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக பொலிசாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிசாரினால் கைது செய்ய்ப்பட்டுள்ள சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இராணுவத்தினரால் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன் : முகம் முழுவதும் காயங்கள்! உறவினர்களின் பகிரங்க வாக்குமூலம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 2 மணி நேரம் முன்

நேற்று முதல் மனைவியுடன் நிகழ்ச்சி, இன்று மாதம்பட்டி ரங்கராஜ் 2வது மனைவி செய்த வேலையை பாருங்களே... Cineulagam

கொற்றவைக்கு பதிலாக ஆஜரான போலீஸ், பதற்றத்தில் குணசேகரன், ஜனனி கண்டுபிடித்த உண்மை... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
