கொள்ளுப்பிட்டியில் கோடிக்கணக்கான பணமோசடியில் சிக்கிய இளைஞன்
இரத்தினக்கல் கடத்தல் சம்பவத்தில் பணமோசடி செய்த சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் ரூ. 88,050,000 மதிப்புள்ள 09 இரத்தினக்கற்களை பெற்று, அதன் மதிப்புக்கு 64,600,000 ரூபாய் மதிப்புள்ள காசோலையை வழங்கி பணத்தை மோசடி செய்துள்ளார்.
குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை
மோசடி மற்றும் நம்பிக்கை மீறல் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் நேற்று (30) கொள்ளுப்பிட்டி பகுதியில் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் கொள்ளுப்பிட்டி பகுதியில் வசிக்கும் 29 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் குறித்து குற்றப்புலனாய்வு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.