ஒமிக்ரோன் சுனாமிக்கு தயாராகும் சுகாதார பிரிவுக்கு எச்சரிக்கை
நாட்டினுள் ஒமிக்ரோன் வைரஸ் சுனாமி போன்று வேகமாக பரவும் அவதானம் ஏற்பட்டால் அதற்காக வைத்தியசாலை கட்டமைப்புகளை தயார் நிலையில் வைக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ரஞ்சித் பதுவன்துடாவ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலை கட்டமைப்பிற்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை சமாளிக்க முடியாமல் போனால் வீட்டில் வைத்து சிகிச்சை வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அதற்காக தொற்றாளர்கள் 1390 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைத்து மேலதிக தகவல்களை பெற்றுக் கொளள் முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரையில் ஒமிக்ரோன் வைரஸ் உலகம் முழுவதும் 124 நாடுகளுக்கும் அதிகமாக பரவியுள்ளது. இந்தியாவின் புதுடெல்லி நகரத்தில் இதுவரையில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இந்த வைரஸ் ஆபத்தான நிலைமையை வெளிப்படுத்திய போதிலும் தற்போது வரையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதனை அவதானிக்க முடிந்துள்ளதென அவர் மேலம் தெரிவித்துள்ளார்.