ஒமிக்ரோனின் புதிய துணைத்திரிபு ஆபத்தானது: ஆய்வில் வெளியான தகவல்
ஒமிக்ரோனின் புதிய துணைத்திரிபு ஆபத்தானது என ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கோவிட்19 வைரஸ் தொற்றின் ஓர் திரிபான ஒமிக்ரோன் திரிபின் துணை திரிபாக பி.ஏ.2 என்னும் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த திரிபானது ஒப்பீட்டளவில் வேகமாக பரவக்கூடியதல்ல என்றாலும் இதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் அதிகம் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஜப்பானிய ஆய்வாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் மூலம் பி.ஏ.2 திரிபானது டெல்டா திரிபினைப் போன்று ஆபத்துக்களை ஏற்படக்கூடியது என தெரியவந்துள்ளது.
கோவிட் தடுப்பூசிகளின் மூலம் கிடைக்கப் பெறும் நோய் எதிர்ப்பு சக்தியை ஊடறுத்து தாக்கக்கூடிய இயலுமை ஒமிக்ரோன் திரிபிற்கு காணப்படுகின்றது.
ஒமிக்ரோன் திரிபிற்கு எதிராக பயன்படுத்தப்படும் மருந்துகளையும் ஊடறுத்து தாக்கும் திறன் இந்த புதிய திரிபிடம் காணப்படுகின்றது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒமிக்ரோனின் பி.ஏ.1 உப திரிபினை விடவும், பி.ஏ.2 திரிபு ஆபத்தானது என ஆய்வுகள் மூலம் தெளிவாக கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, தற்போதைக்கு மக்கள் முக கவசங்களை அகற்றுவது உசிதமான தீர்மானமாக அமையாது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri