ஒமிக்ரோன் மற்றும் டெல்டா என்பன ஒரே நேரத்தில் தொற்றினால் என்ன நடக்கும்: எச்சரிக்கும் சுகாதார பிரிவு
ஒமிக்ரோன் மற்றும் டெல்டா வைரஸ் திரிபுகள் ஒருவருக்கு ஒரே நேரத்தில் தொற்றுவதன் மூலம் கடும் வீரியம் கொண்ட திரிபு உருவாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சில நாடுகளில் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை சுகாதார பிரிவுகள் தெரிவித்துள்ளன.
பிரித்தானிய சுகாதார ஆராய்ச்சியாளர்கள் குழுவும் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒமிக்ரோன் என்ற வீரியம் கொண்ட வைரஸ் திரிபு உலகில் பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.
இதனால், இலங்கையும் இந்த விடயத்தில் விசேட கவனத்தை செலுத்த வேண்டும் எனவும் சுகாதார பிரிவினர் கேட்டுள்ளனர். இலங்கையில் கொரோனா வைரஸின் வீரியம் கொண்ட திரிபான டெல்டா பரவி வருகிறது.
இது சம்பந்தமாக கருத்து வெளியிட்டுள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடத்தின் ஒவ்வாமை, நுண்ணுயிரிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆய்வு பிரிவின் தலைவர் கலாநிதி சந்திம ஜீவந்தர,( Chandima Jeevandhara) ஒமிக்ரோனில் இருந்து தப்பிக்க சிறந்த வழி பூஸ்டர் தடுப்பூசி எனக் கூறியுள்ளார்.
இதனால், பூஸ்டர் தடுப்பூசியை துரிதமாக பெற்றுக்கொள்ளுமாறும் அவர் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருமணத்திற்கு பின் சூப்பர் சிங்கர் மேடையில் தொகுப்பாளினி பிரியங்கா.. பிரபல நடிகரிடம் வாங்கிய அடி, புரொமோ Cineulagam
