இலங்கைக்கு அருகில் ஒமிக்ரோன்! - அபாய நிலை குறித்து எச்சரிக்கை
உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் ஒமிக்ரோன் கோவிட் தொற்று தற்போது இந்தியாவிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்ட இருவர் இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தியாவின் கர்நாடக பகுதியிலுள்ள இருவருக்கே ஒமிக்ரோன் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
66 மற்றும் 46 வயதான இரண்டு ஆண்களுக்கே இவ்வாறு ஒமிக்ரோன் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தென்ஆபிரிக்காவிலிருந்து பரவ ஆரம்பித்த ஒமிக்ரோன் வைரஸ் தொற்று, தற்போது 20திற்கும் அதிகமான நாடுகளை தாக்கியுள்ளது.
இவ்வாறான நிலையில், இந்தியாவை ஒமிக்ரோன் வைரஸ் தற்போது தாக்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
தென் ஆபிரிக்காவிலிருந்து பெங்களுர் வருகைத் தந்த இருவருக்கே இந்த தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இருவருடன் இந்தியாவிற்கு வருகைத் தந்த பயணிகள் மற்றும் இவர்களுடன் தொடர்பினை பேணியவர்களை கண்டறியும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, உலகளாவிய ரீதியில் ஒமிக்ரோன் வைரஸ் அதீத அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியாவில் தற்போது வைரஸ் கண்டறியப்பட்டிருப்பது இலங்கைக்கான ஒரு எச்சரிக்கையாக பார்க்கப்படுகின்றது.

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
