”ஒமிக்ரோன்“ அச்சம்- இலங்கைக்கு வராத ஆபிரிக்க நாட்டவர்கள்
புதிய கொவிட் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள ஆறு ஆபிரிக்க நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் எவரும் கடந்த 14 நாட்களாக நாட்டிற்கு வரவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்கா, நமீபியா, பொட்ஸ்வானா, ஸிம்பாப்வே, லெசோதோ மற்றும் சுவாசிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளே கடந்த 14 நாட்களாக நாட்டிற்கு வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கடந்த 14 நாட்களில் இந்த நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் தவிர வேறு எவரும் நாட்டிற்கு வந்துள்ளார்களா என்பது குறித்து ஆராயப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் இன்று நள்ளிரவு முதல் தென்னாபிரிக்கா, நமீபியா, பொட்ஸ்வானா, ஸிம்பாப்வே, லெசோதோ மற்றும் சுவாசிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam