இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் தெரிவில் ஐஸ்வர் உமர் வெற்றி
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் தெரிவில் ஐஸ்வர் உமர் 8 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார்.
இன்று இடம்பெற்ற இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் நிர்வாகிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் தொடர்பில் தெரியவருகையில்,
இத்தேர்தலில் பங்கேற்ற ஐஸ்வர் உமர், தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் பாரிய பின்னடைவைச் சந்தித்தபோதும் வடக்கு மற்றும் கிழக்கின் பலமான ஆதரவுடன் வெறுமனே 6 வாக்குகள் வித்தியாசத்தில் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கூட்டணியில் அங்கம் வகித்த வடமராட்சி உதைபந்தாடட லீக்கின் தலைவர் வரதராஜன் பிரதி செயலாளராகவும், யாழ் உதைபந்தாட்ட லீக்கின் தலைவர் ஆனோல்ட் உபதலைவராகவும், வவுனியா உதைபந்தாட்ட லீக்கின் தலைவர் நாகராஜன் உதவி பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இத்தேர்தலில் ஐஸ்வர் உமர் மற்றும் மணில் பெனாண்டோ முறையே காலி மாவட்டத்தில் 19,51 வாக்குகளும், கண்டி மாவட்டத்தில் 34, 20 வாக்குகளும், பொலநறுவை மாவட்டத்தில் 43, 19 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இதன்படி மொத்தமாக ஐஸ்வர் உமர் 96 வாக்குகளும், மணில் பெனாண்டோ 90 வாக்குகளும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.