ஓமந்தை - வேப்பங்குளம் பகுதியில் வீடு உடைத்து நகை மற்றும் பணம் திருட்டு
வவுனியா- ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேப்பங்குளம் பகுதியில் பட்டப் பகலில் வீடு உடைத்து நகைகள் திருடப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஓமந்தை, வேப்பங்குளம் பகுதியில் வீடு ஒன்றில் வசித்து வந்தவர்கள் தேவை நிமிர்த்தம் வெளியில் சென்ற நிலையில், அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள் அலுமாரியிலிருந்த பணம் மற்றும் நகை என்பவற்றினை திருடிச்சென்றுள்ளனர்.
மாலை நேரம் வீட்டு உரிமையாளர் வீடு திரும்பிய சமயத்தில் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததுடன், 1000 ரூபா பணமும் வீட்டு வாயிலில் காணப்பட்டது.
உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்து பணமும், பெறுமதியான நகைகளும் திருடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து வீட்டார் ஒமந்தை பொலிஸ் நிலையத்தில் வழங்கிய
முறைப்பாட்டினையடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam