கொழும்பில் நில முதலீடுகளை மேற்கொள்ளவுள்ள ஓமானிய அரசு
கொழும்பு-2 இல் அமைந்துள்ள வான் படை தலைமையகத்துக்கு சொந்தமான நிலம், கோட்டையில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான சால்மர் கிரானரி நிலம் ஆகியவற்றில் முதலீடுகளை மேற்கொள்ள ஓமானிய நாட்டு அரசாங்கத்தின் முதலீட்டு பிரிவு விருப்பம் வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து, கலவை வளர்ச்சித் திட்டங்களை, குறித்த இடங்களில் மேற்கொள்ளும் பொருட்டு ஆய்வுக்காக ஒரு குழுவை அனுப்ப ஓமானிய அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபை, தனது பல நிலங்களை, 30 முதல் 99 ஆண்டுகள் வரை குத்தகைக்கு வழங்க முதலீட்டாளர்களை தேடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், பெய்ரா ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்டார் நாட்டின் சில நிறுவனங்கள், முதலீடுகளுக்கு ஆர்வம் காட்டியுள்ளன.
ஏற்கனவே கொழும்பிற்கான ஒரு பாரிய திட்டத்தை நகர அபிவிருத்தி அதிகார சபை உருவாக்கியுள்ளது.
பாரம்பரியம், போக்குவரத்து மையம், நிதி நகரம் மற்றும் வணிக நகரம் ஆகியவற்றுக்காக இந்த திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
உயர், நடுத்தர மற்றும் தாழ்வான கலப்பு வளர்ச்சித் திட்டங்கள் போன்ற குறிப்பிட்ட நோக்கங்களுக்காக நாடு முழுவதும் நாற்பத்திரண்டு நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
(p)பெய்ரா வாவி பகுதியில், விருந்தோம்பல், ஓய்வு, குடியிருப்பு மற்றும் அலுவலகங்கள் மற்றும் பல மாடி வாகனத் தரிப்பிடங்கள் போன்றவற்றுக்காக நிலத்தை வழங்கும் வாய்ப்புகள் உள்ளன.
இதேவேளை, மேல் மாகாணத்தில், பொரல்லையில் உள்ள வெலிக்கடை சிறை நிலம், விவசாயத் துறை மற்றும் மில்கோ நிலம், அத்துடன் இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய நிலங்கள் முதலீடுகளுக்காக வழக்கப்படவுள்ளன.
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri