ஓமான் - நமீபியா பலப்பரீட்சை: சுப்பர் ஓவரில் வென்ற நமீபியா
உலக கிண்ண டி20 கிரிக்கட் தொடரின் ஓமான் (Oman) அணிக்கெதிரான போட்டியில் நமீபியா (Namibia) அணி சுப்பர் ஓவரில் 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
மேற்கிந்திய தீவுகளின் கின்சிங்டன் ஓவல் பார்படாஸ் மைதானத்தில் இன்று (03.06.2024) நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாணய சுழட்சியில் வெற்றிபெற்ற நமீபியா அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி, 19.4 ஓவர் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 109 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ஓமான் அணி சார்பில் அதிகபட்சமாக காலித் கைல் 34 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
சுப்பர் ஓவர்
110 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நமீபியா, ஆரம்பம் முதலே தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
இந்நிலையில், இறுதிப்பந்தில் 2 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் இருந்த நமீபியா அணி 1 ஓட்டத்தை மாத்திரம் பெற போட்டி சமநிலை அடைந்தது.
இதனையடுத்து, போட்டியானது சுப்பர் ஓவர் முறைக்கு (Super Over) மாற்றப்பட்டது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணியின் டேவிட் விசா 4 பந்துகளில் 13 ஓட்டங்களையும் ஹெகார்ட் எராஸ்மஸ் 2 பந்துகளில் 8 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இலங்கை - தென்னாபிரிக்கா
வெற்றியிலக்கான 22 ஓட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஓமான் அணியால் 10 ஓட்டங்களை மாத்திரம் பெறமுடிந்த நிலையில் தோல்வியை சந்தித்தது.
இதற்கமைய, போட்டியின் ஆட்டநாயகனாக நமீபியா அணியின் டேவிட் விசா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும், இலங்கை நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் இலங்கை அணி தென்னாபிரிக்க அணியை எதிர்கொள்ளவுள்ளது.
நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய பல வீரர்கள் இரு அணிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துவதால் போட்டியானது எதிர்பார்ப்பு மிக்க ஒன்றாக மாறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |