முன்னாள் பெண் அதிபர் கொடூரமாக கொலை - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

Sri Lanka Police Ratnapura Death
By Vethu Aug 24, 2026 11:08 AM GMT
Report

இரத்தினபுரி, இறக்குவானை பிரதேசத்தில் 69 வயதான ஓய்வுபெற்ற பெண் அதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.

நபர் ஒருவர் தனது பிள்ளையின் பிறந்தநாளுக்கு கேக் வாங்குவதற்காகப் பணம் திரட்ட முயன்ற போது, வீட்டில் தனியாக இருந்த ஆசிரியர் ஒருவர் கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இருவர் 22 ஆம் திகதியன்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக இறக்குவானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொடூரமாக கொலை

வீடு வீடாக சென்று தேங்காய் பறிக்கும் நபர் ஒருவரும், 2 முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுமே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னாள் பெண் அதிபர் கொடூரமாக கொலை - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல் | Old Teacher Killed Shocking Reason Revealed

இறக்குவானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலஹிட்டிய, பெலவத்தை பகுதியை சேர்ந்த விமலானி என்ற ஓய்வுபெற்ற பெண் அதிபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 21ஆம் திகதி மாலை, தனியார் வர்த்தக நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் உயிரிழந்த பெண்ணின் ஒரே மகன், இரவு 7.45 மணியளவில் வீடு வந்து தனது தாயை தேடியுள்ளார்.

இதன்போது தாயின் நிர்வாணமான சடலம் வீட்டின் அறை ஒன்றின் தரையில் கிடப்பதைக் கண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இது குறித்து அயலவர்களுக்கு தெரிவித்து, தாயின் மர்ம மரணம் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

சம்பவம் நடந்த நாளின் பகல் வேளையில் கூலிக்குத் தேங்காய் பறிக்கும் நபர் ஒருவர் நடமாடியுள்ளதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

அன்று மாலை வேளையில் ஆசிரியை கொல்லப்பட்ட வீட்டிற்கு அருகிலுள்ள வீதியில் பிரதான சந்தேக நபர் நடமாடியுள்ளதாகவும் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

அடுத்த நாள் அதிகாலை மூன்று மணியளவில் சந்தேக நபரை கைது செய்து விசாரித்த போது, கொலை செய்யப்பட்ட ஆசிரியைக்கு சொந்தமான தங்க மோதிரம் ஒன்று சந்தேக நபரின் வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தங்க மோதிரம்

பெண் அதிபரின் வீட்டின் காணிக்குள் சென்று மறைந்திருந்து வீட்டின் பின்பக்க கதவூடாக வீட்டிற்குள் நுழைந்து, குளிக்க தயாராக இருந்த அவரது தலையில் கட்டையால் பலமுறை தாக்கியதாக சந்தேகநபர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பெண் அதிபர் கொடூரமாக கொலை - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல் | Old Teacher Killed Shocking Reason Revealed

இதன்பின்னர் அவர் கீழே விழுந்ததும், அவரது கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியையும் தங்க மோதிரத்தையும் கழற்றிக்கொண்டு தப்பியோடியதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த செயலுக்கு உதவியாக முச்சக்கர வண்டி ஓட்டுநரான தனது நண்பரையும் ஈடுபடுத்திக்கொண்டதாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

தனது பிள்ளையின் பிறந்த நாளுக்கு கேக் மற்றும் விளையாட்டு பொருட்கள் வாங்குவதற்கு பணம் தேடுவதற்காகவே இதனை செய்ததாக சந்தேகநபர் மேலும் தெரிவித்துள்ளார்.

திருடப்பட்ட தங்கச் சங்கிலியை கொடகெவல நகரில் உள்ள தனியார் அடகு மையமொன்றில் 90,000 ரூபாவிற்கு அடகு வைத்து பணம் பெற்றுக்கொண்டதாகவும், அன்றைய இரவில் நண்பர்களுடன் சேர்ந்து விருந்து வைத்து கொண்டாடியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபருடன் முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் இருவரிடமும் சம்பவம் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொரளையில் பரபரப்பை ஏற்படுத்திய கைக்குண்டு - சிசிடிவியில் சிக்கிய சந்தேகநபர்கள்

பொரளையில் பரபரப்பை ஏற்படுத்திய கைக்குண்டு - சிசிடிவியில் சிக்கிய சந்தேகநபர்கள்

திடீரென காணாமல்போன வைத்திய நிபுணர் சடலமாக மீட்பு - பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்

திடீரென காணாமல்போன வைத்திய நிபுணர் சடலமாக மீட்பு - பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்

you may like this video


1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US